தமிழில் சீசன் சீசனாக நடந்து வரும் பிக்பாஸ் தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சீசன் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அமீர், ராஜி, பிரியங்கா, பாவணி, நிரூப், தாமரைச்செல்வி மற்றும் சிபி என தற்போது ஏழு போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் சென்ற வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் அமீர் வெற்றி பெற்று முதல் பினலிஸ்ட் ஆகியுள்ளார். இன்று காலை வந்த முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது. அதில் மாற்றி மாற்றி சில காரணங்களை சொல்லி நாமினேட் செய்து கொண்டுள்ளனர்கள். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே பிரச்சனை தீயாய் எழுந்துள்ளது.
மேலும் இன்று அடுத்து வந்த இரு ப்ரோமோவில் வழக்கம்போல் நிரூப் மற்றும் பிரியங்காவின் சண்டை அமீர் மற்றும் தாமரையிடயே சில வாக்குவாதங்கள் இன்று நடக்க உள்ளது. மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் உள்ள நிலையில் 5 போட்டியாளர்கள் பைனல்ஸ் செல்வார்கள்.
ஆகையால் மீதி உள்ள இரண்டு போட்டியாளர்களில் இந்த வார இடையில் ஒருவர் பண பெட்டியுடன் செல்வார் மற்றொருவர் வார இறுதியில் எவிக்ஷன் ஆகி செல்வார் இல்லையெனில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து இரண்டு நபர்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் வெளியேறிய உடனடியாக அவருக்கு முன்னதாக வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்களான வருண் மற்றும் அக்ஷராவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது இவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.