நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அந்த வகையில் அடுத்ததாக இவர் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை சீரும் சிறப்புமாக எடுக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அசோக் என்பவருடன் கைகோர்த்து “சிங்கபாதை” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
முதலில் இந்த படத்தின் கதையை அவர் கூறும்போது பல தடவை நிராகரித்துள்ளார் ஆனால் இயக்குனரோ இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் பொருத்தமானவராக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன் கதையில் சில மாற்றங்களை செய்து மீண்டும் மீண்டும் கதையை கூறியுள்ளார் ஒரு கட்டத்தில் அது சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போக ஒத்துக்கொண்டார்.
தற்போது இந்த படத்தின் படபிடிப்பு எடுக்கப்பட ரெடியாக இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தகவல் இதனால் ரசிகர் மத்தியில் சிங்கபாதை படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது சும்மாவா மிரட்டுவார் இப்பொழுது இரண்டு கதாபாத்திரம் என்பதால் படம் வேற லெவல் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இரண்டு நடிகைகளை படக்குழு தற்போது தேர்வு செய்துள்ளதாக அதாவது தந்தை சிவகார்த்திகேயனுக்கு சாய்பல்லவியும், மகன் சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தி ரெட்டியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.