“மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” படத்தில் சம்பளம் வாங்காமல் பணியாற்றிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா.? வெளியான தகவல்.

maraikaiyar
maraikaiyar

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் லவ்வர் சூப்பர் ஸ்டார் மோகன்லால். 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருவதால் இன்றும் இவரது படத்திற்கான வரவேற்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இவர் நடித்த லூசிபர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதின் தொடர்ந்து தற்போது பிரியதர்ஷன் அவருடன் கைகோர்த்து “மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” என்ற திரைப்படத்தில் மோகன்லால் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது இந்த படம் மோகன்லால் கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த அளவிற்கு பழைய காலத்தில் நடத்த  ஒரு கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம் ரசிகர்களும் மக்களும் திரையரங்கில் வெளிவரும் என எதிர்பார்த்தனர் ஆனால் படக்குழு இந்த திரைப்படத்தை OTT தளத்திற்கு விற்றது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இந்த திரைப்படத்தை மோகன்லாலின் நெருங்கிய நண்பர் பெரும்பாவூர என்பவர் தயாரித்து இருந்தார் . மோகன்லாலும், தயாரிப்பாளரும்  நல்ல பழக்கம் என்பதால் இருவரும் ஒன்னும் சொல்லாத  OTT தளத்திற்கு இந்த படம் கை மாறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த படத்தை எடுத்த பிரியதர்ஷன் கூறியது: ஆண்டனி பெரும்பாவூர் இதே படத்தை தயாரிக்க தன்னிடம் இருந்த காசு பணம் என எல்லாவற்றையும் வைத்ததுதான் இந்த படத்தை எடுத்துள்ளார் இந்தத் திரைப்படத்திற்காக நானும் மோகன்லாலும் 25 வருடமாக கனவு கண்டு படம்தான்.

இந்த படத்திற்காக தற்போது நானும் மோகன்லாலும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. கலை இயக்குனர் சாபுசிரில் இந்த திரைப்படத்தின் கலைக்காக தனது சம்பளத்தை குறைத்து வெறும் 25 லட்சம் தான் வாங்கிக் கொண்டார் ஏனென்றால் இந்த படத்தில் அவ்வளவு தனது திறமையை காட்டி உள்ளார். அதில் அவரது திறமை நிச்சயம் மக்களை கவர்ந்து இழுக்கும் என கூறப்படுகிறது.

நாங்கள் என் OTT தளத்தில் இந்த படத்தை விற்க காரணம் கொரனோ ஒரு பக்கம் மற்றும் சரியான நிலைமை மற்றொரு பக்கம் என எதுவுமே எங்களுக்கு சாதகமாக இல்லாததால் திரையரங்கில் எங்களால் படத்தை வெளியிட முடியவில்லை எங்களுக்கும் ஆசை தான் திரையரங்கில் வெளியிட்டு மக்களை சந்தோஷப்படுத்துவது ஆனால் சூழல் அமையாததால் இந்த முடிவை எடுத்து மேலும் தயாரிப்பாளர் இந்த படத்தை எடுக்க பல வருடங்கள் ஆகியது.

அவர் தனது தன்னிடம் இருந்த காசையும் தாண்டி மற்றவரிடம் காசு வாங்கி தான் தற்போது இந்த படத்தை அவர் தயாரித்துள்ளார்.  அதற்கு தற்போது வட்டி கட்டி வருகிறார் இந்த மொத்த காசையும் அவர் திருப்பிக் கொடுத்து லாபம் பார்த்தால் மட்டுமே அவர் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்ற காரணத்தினால் ஓட்டிட்டு தளத்திற்கு கொடுக்கப்பட்டதாக  தெரிவித்தார்.