தமிழ் சினிமாவில் குறைந்த திரைப் படங்களை இயக்கியிருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வசூல் வேட்டையை பெற்று கொடுத்ததால் இயக்குனர் அட்லீ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவரை போன்று பல இயக்குனர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவார்கள்.
அதனால் இவர் மட்டும் நிலைத்து நிற்க காரணம் எடுத்த உடனேயே விஜயுடன் தொடர்ந்து மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியது தான் காரணமான கூடுகிறது. மேலும் அந்த திரைப்படங்கள் மக்களுக்கு இன்றும் பிடித்துக்போன படங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசூலில் அடித்து நொறுக்கியது.
அட்லீ மேலும் விஜய்யை வைத்து தமிழில் அடுத்தடுத்து படங்களை கொடுக்க முயன்றாலும் விஜய் ஆர்வம் காட்டாததால் தற்பொழுது தமிழை தாண்டி இந்தி பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தியில் எடுத்தவுடனேயே ஷாருக்கானுடன் இவர் கைகோத்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஷாருக்கான்னு ஜோடியாக நயன்தாரா மற்றும் காமெடிக்காக யோகி பாபு போன்ற ஒவ்வொருவரையும் தட்டி தூக்கி வந்த நிலையில் வின்னலாக ராண டகுபதியையும் களமிறக்கி உள்ளார்.
படப்பிடிப்பு தற்போது பூனேயில் உள்ள மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்திற்கு “லயன்” என பெயர் வைத்துள்ளார் அட்லீ. படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று அட்லீ பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்.
அந்த பார்ட்டியில் பல நட்சத்திர பட்டாளங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர் மேலும் ப்ரியா அட்லீ நேற்று அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பார்ட்டியில் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா அவர்களும் கலந்து கொண்டனர்.