நடிகர் சூர்யா நடிப்பில் சில ஆண்டுக்கு முன்பு வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் மக்கள் பலருக்கும் பிடித்த படமாக அமைந்தது. இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்கியிருந்தார் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தனர் இவர்களது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அண்மையில் சூரரை போற்று படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த ஜெய் பீம் தமிழ் திரை உலகில் ஒரு சிறந்த படமாக பார்க்கப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது சூர்யா பாலாவுடன் இணைந்து வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தாமல் விட்டு விட்டு நடத்தி வருகிறார் மற்றும் கதையில் பல மாற்றங்களை செய்து வருகிறாராம்.
இதனால் சூர்யா நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து தனது அடுத்த படத்தின் பூஜையை இன்று தொடங்கியுள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என தெரிய வருகிறது. இந்த படத்தை யூகே நிறுவனம் தயாரிக்க உள்ளது. இன்று சென்னை ராயபுரத்தில் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட போது அதில் சூர்யா, சிவா, மோகன்லால், பா ரஞ்சித் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த புகைப்படம் கூட இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. பான் இந்திய அளவில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு முன் சூர்யாவிற்கும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு ஆதிநாராயணன் கதை எழுத மதன் கார்த்தி வசனகர்த்தாவாக இணைய உள்ளார்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி பணியாற்ற உள்ளனர் நாளை முதல் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது