டாக்டர் பட்டம் பெற்ற 10 தமிழ் நடிகர் யார் என்று தெரியுமா.? அட லிஸ்டில் நம்ம தலைவரும் இருகிறார

tamil-actor

தமிழ் சினிமாவில் டாக்டர் பட்டம் பெற்ற 10 தமிழ் நடிகர்களை பற்றி தற்போது இந்தப் பட்டியலில் பார்ப்போம்.

சிவாஜி கணேசன்-நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படுகிறார் இவரது திறமையான நடிப்பை பாராட்டி 1986ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

எம் ஜி ஆர் தமிழகத்தின் சிறந்த நடிகராகவும் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்கள் 1974 ஆம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

mgr
mgr

விஜயகாந்த் – கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் புகழ்பெற்ற நடிகராகவும் அரசியல்வாதியாகவும்விளங்குகிறார்.இவருக்கு 2011ஆம் ஆண்டு ப்ளோரிடாவில் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம்  டாக்டர் பட்டம் வழங்கியது.

vijayakanth

சின்னி ஜெயந்த்- புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞரான சின்னி ஜெயந்த் அவர்கள் நடிப்பு, குரல் மாற்றம், நாடகம் மற்றும் சமூக சேவை துறையில் இவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டி 2013ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச மாற்று மருத்துவப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

கமல் ஹாசன் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் பல விருதுகளை வென்று குவித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு 2005 இல் சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

நாசர் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனது முழு திறமையான நடிப்பை வெளிபடுத்திய ஒரு நடிகர் நாசர் அவர்களை பாராட்டி 2016 ஆம் ஆண்டு மே7 அன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

பிரபு தமிழ் சினிமாவின் பல புகழ்பெற்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர கதாபாத்திரமாகவும் தனது எளிமையான நடிப்பால் பலரின் உள்ளம் கவர்ந்த பிரபு அவரது திறமையைப் பாராட்டி 2011ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வாங்கியது.

விஜய் தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்து வரும் விஜய் அவர்கள் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மாநாட்டில் தனது பன்முக திறமைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார்.

vijay

விக்ரம் அவர்களை வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் 2011ம் ஆண்டு இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் என்ற பல்கலைக்கழகம் இவரின் சிறந்த நடிப்பு திறமையை கௌரவித்து இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

vikram

விவேக் அவர்களது நகைச்சுவை அனைத்தும் பார்ப்பவரை சிரிக்க மட்டும் அல்லாமல் சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை இவர் தன்னுடைய கலைகள் மூலம் சமூகத்திற்கு நன்மை செய்ததற்காக 2015ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

vivek