80, 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா இவர் ரஜினி போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் எந்த ஒரு கிசுகிசுகளிலும் சிக்காமல் இருந்தார் தொடர்ந்து சூப்பராக நடித்து ஓடிய இவர் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார் தற்பொழுது இவருக்கு வயது அதிகமானாலும் இளமையுடன் இருந்து வருகிறார்.
இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. இவர் இளமையாக இருக்க காரணம் அவரது சந்தோஷம் தான் என சொல்லப்படுகிறது நடிகை நதியா எப்பொழுதும் சோகமாகவே இருக்க மாட்டாராம் எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருப்பதினால் தான் அவரது அழகு குறையவில்லை என சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நதியா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மலையாளம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமாகி வருபவர் பகத் பாசில் விக்ரம் படத்தில் இவரது நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது தற்பொழுது கூட தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
அவர் பற்றி நதியா சொன்னது அவரை நான்கு வயதில் இருந்தே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அப்பொழுது குழந்தையாக பார்த்த அவர் இன்று பலரும் புகழும் ஒரு நட்சத்திரமாக மாறி உள்ளார் இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்தார் மேலும் மலையாளத்தில் அவருக்கு பகத் பாசிலை பிடிக்குமாம், தமிழில் விஜய் சேதுபதி ஜெயம் ரவியும் செம்மையாக நடிகர்களாம் அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்குமாம்.
குறிப்பாக ஜெயம்ரவி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்பொழுது கூட வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் கதையை தழுவி படம் உருவாகியுள்ளது அந்த படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அது எனக்கு ரொம்ப சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.