ரஜினி குடும்பத்துடன் சேர்த்து பார்க்கும் சீரியல் எது தெரியுமா.? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

rajini
rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது அதற்கு முன்பாக படத்திலிருந்து காவலா, ஹுக்கும் போன்ற பாடல்கள் வெளிவந்து ட்ரெண்டாகின.

அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த ஜெயிலர் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது இந்த நிலையில் ரஜினி பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் இணையதள பக்கத்தில் வைரல் ஆகிய வருகிறது. சன் டிவி தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்..

எதிர்நீச்சல் இந்த சீரியலை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குனர் திருச்செல்வம் கூறி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் கோலங்கள் சீரியலை இயக்க முடிந்த நிலையில் எனக்கு ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது நான் அவரை பார்க்க சென்றேன்.

சீரியலை பற்றி இன்னும் சில விஷயங்கள் குறித்தும் இருவரும் 45 நிமிடங்கள் பேசினோம் பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார் படபிடிப்பின் பொழுது மாரிமுத்துவிடம் எதிர்நீச்சல் சீரியலைப் பற்றி ரஜினிகாந்த் பேசி உள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலை தனது வீட்டில் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள் நானும்  அவ்வபோது பார்ப்பேன் என ரஜினி கூறியதாக திருச்செல்வம் பேட்டியில் கூறியுள்ளார். விஷயத்தை அறிந்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி சீரியல் பார்க்கிறாரா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.