2022-ல் அதிகம் வசூல் சாதனை செய்த தமிழ் படங்கள் முதல் மூன்று இடத்தில் எந்த படம் தெரியுமா.?

ajith vijay kamal
ajith vijay kamal

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான நடிகர்களின்  படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அதிகளவு வசூலை அள்ளுகின்றன. அதிலும் குறிப்பாக டாப் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் தரமான படமாக கொடுத்து நல்ல லாபம் பார்க்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்த விவரத்தை பார்ப்போம்.

விக்ரம் : உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கோலிவுட் வட்டாரத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் படம் தற்போது வரை ரூ 260 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்த முதல் படமாக பார்க்கப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படம் இன்னும் வசூலை அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் : விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் குறைச்சல் இல்லாமல் உலக அளவில் மொத்தமாக 215 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  வலிமை : அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ 200 + கோடி வசூல் செய்துள்ளது.

டான் : சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் திரைப்படம் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஒளிபரப்பாகியது இந்த படம் உலக அளவில் ரூ 125 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. எதற்கும் துணிந்தவன் : சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சமூக அக்கறை உள்ள படமாக வெளிவந்து குடும்பங்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது இப்படம் உலகம் முழுவதும் 80 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளிவந்த இந்த படம் காமெடி ரொமான்டிக், காதல் போன்றவை இடம் பெற்றுள்ளதால் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் இப்படம் உலகம் முழுவதும் 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. FIR : விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மொத்தமாக 24 கோடி வசூல் செய்துள்ளது. வீரமே வாகை சூடும் :விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மொத்தமாக 23 கோடி வசூல் செய்துள்ளது.