2022-ல் மக்கள் அதிகம் விரும்பி பார்த்த திரைப்படம் எது தெரியுமா.? இரண்டாவது இடத்தில் விக்ரம்..

vikram
vikram

வருடத்திற்கு 100-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன.  அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மிகப் பெரிய வசூலை பதிவு செய்யும் மேலும் மக்களை கவர்ந்து எடுக்கும் அந்த வகையில் 2022 ம் ஆண்டில் அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் எது எது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் எடுத்த திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல அள்ளி சாதனை படைத்தது..

இந்த படம் அதிக மக்கள் பார்த்து முதலிடத்தை பிடித்துள்ளது. உலகநாயகன் கமலஹாசன் திரையுலகில் எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார் ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 410 கோடி வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தை மக்கள் அதிக பேர் பார்த்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

மூன்றாவது இடத்தை தனக்கு சொந்தமாகி உள்ளது அஜித்தின் வலிமை திரைப்படம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்களுக்கு ரொம்பவும் பிடித்து போனது அதனால் அதிக பேர் பார்த்து இந்த இடத்தை பிடித்திருக்கிறது.

மற்றும் மொழி படங்கள் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது அந்த வகையில்  இந்த ஆண்டில் கே ஜி எஃப்  2, RRR ஆகிய திரைப்படங்கள் படங்கள் சொந்த மொழியை தாண்டி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படங்கள் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.