சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலில் “ஒரு கோடி” சம்பளம் வாங்கிய திரைப்படம் எது தெரியுமா.?

rajini
rajinirajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்பொழுதும் அந்த ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து அவர் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் அண்ணாத்த.

படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 200 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது இருப்பினும் ரஜினி ரேஞ்சிக்கு இது கம்மி என்பதால் அடுத்த படத்தை மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக கொடுக்க நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னை மற்றும் பல இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய திரைப்படம் எது என்பது குறித்து நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் தளபதி. வெளிவந்து மிகப்பெரிய ஹிட் இந்த படம் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு பெஸ்ட் படமாக இப்பொழுதும் இருந்து வருகிறது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினி ஒரு கோடி சம்பளம் வாங்கினார்.

இதுதான்  அவர் முதலில் வாங்கிய ஒரு கோடி சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு படம் வெற்றி பெறும்போதும் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 100 கோடியில் இருந்து 125 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.