நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமானவர். சினிமாவில் ஓரளவிற்கு வளர்ச்சியடைந்த பிறகு நடிகர்களின் குணாதிசயங்களில் ஒரு சில மாற்றங்கள் தென்படும். ஆனால் அஜித் தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
இருந்தாலும் அவர் பார்ப்பதற்கு எளிமையாகவே நடந்து கொள்வார் மேலும் மறைமுகமாக பல உதவிகளை செய்து வருகிறார் இதனால் அவரை ரசிகர்கள் பலரும் ரோல் மாடலாக கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். அஜித் சினிமாவில் எப்படியோ அதேபோல குடும்பத்திலும் மிக நல்லவர் அவரது குடும்ப உறுப்பினர்களை சிறப்பாக பார்த்துக் கொண்டு வருகிறார்.
அஜித் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே நடிகை ஷாலினி உடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அப்போது அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை பல ஆண்டுகளாக தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
இருவருக்கும் ஆத்விக் மற்றும் அனோஷ்கா என்ற மகனும் மகளும் உள்ளனர். அஜித் மற்றும் ஷாலினி இருவரும் சமூக வலைதளங்களில் பெரிதும் ஆக்டிவாக இருப்பதில்லை. அதனால் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி தான் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.
இந்த நிலையில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி கூட அஜித்துடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அது எந்த படம் என்றால் அஜித் கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்த கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்.
படத்தில் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு இருவருக்கும் தங்கையாக ஷாமிலி நடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன