சினிமா உலகம் சமீபகாலமாக சில பிரச்சனைகளை சந்தித்து வந்ததால் பெரிய அளவு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருந்தன. போதாத குறைக்கு திரையரங்கிலும் 50% இருக்கைகள் கொடுக்கப்பட்டதால் பெரிய படங்கள் கூட வசூலில் அதிக அளவு ஈட்ட முடியாமல் திணறியது.
ஆனால் ஒரு வழியாக தற்போது அரசு அனுமதியுடன் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியதையடுத்து தற்பொழுது பல டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் களம் இறங்கியது.
முதல் நாளே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய அளவு விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் இந்த திரைப்படம் கிராமத்து கதை என்பதால் தற்போது பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர். முதல் நாள் மட்டுமே 70 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய நிலையில் இரண்டாவது நாளிலேயே 110 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை அள்ளி புதிய சாதனை படைத்தது.
நிச்சயம் இன்னும் வருகின்ற நாட்களில் நல்ல வசூல் வேட்டையை நடத்தி சுமார் 300 கோடிக்கு மேல் அண்ணாத்த திரைப்படம் குவிக்கும் என சினிமா பிரபலங்களின் கருத்தாக இருக்கிறது. எப்பொழுதும் ரஜினியின் படங்கள் புதிய சாதனை படைப்பதும் பழைய சாதனைகளை அடித்து நொறுக்குவது வழக்கமாக வைத்துள்ளது.இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டில் முதல் நாள் அதிகம் வசூலித்த படங்கள் குறித்து நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம்.
அதன்படி தமிழ் சினிமாவில் முதல் நாளில் ரஜினியின் அண்ணாத்த படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த திரைப்படம் 34.92 கோடியை அள்ளியது. இரண்டாவது இடத்தை ரஜினியின் 2.0 படம் 33.58 கோடி. மூன்றாவது இடத்தை விஜயின் சர்க்கார் படம் 31.62 கோடியை அள்ளியது.