Kamal haasan act silent movie : நடிப்பிற்கு பெயர் போனவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகள் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களில் தனது நடிப்பு திறமையும் வெளிப்படு மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து கைவசம் கல்கி, மணிரத்தினத்துடன் ஒரு படம், ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணவும் உலகநாயகன் திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படி சினிமா உலகில் பிஸியாக ஓடும் உலக நாயகன் சின்னத்திரையில் பிக் பாஸ் சீசன் 7 -யும் தொகுத்து வழங்க இருக்கிறார் அது வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி கோலாகலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படி பட்ட உலக நாயகன் கமல்ஹாசன் சங்கீதம் சீனிவாச ராவ்..
இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான புஷ்பக விமான படத்தில் நடித்தார் இந்த படம் அப்பொழுது வெளியாகி நல்ல வெற்றி பெற்றது இந்தியாவில் முதல் சைலன்ட் படமாக வெளிவந்தது படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து அமலா, பிரதாப் போதன் என பல திரைபட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்திய முழுவதும் வெளியானது தமிழில் பேசும் படம் என்ற தலைப்பில் வெளியானது. புஷ்பக விமான படம் வெளியாகி இத்துடன் 36 ஆண்டுகளை கடந்துள்ளது இன்றும் இந்த படத்தை பற்றி பலரும் பேசி வருகின்றனர் இது ஒரு அடையாளமாகவே இருந்து வருகிறது.