தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன்..
முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது நடிகர் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மூன்றாவது கட்ட ஷூட்டிங் தற்போது ஹார்பர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து..
சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ஜெயசுதா, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த ஒரு படமாக இருக்கும் என தயாரிப்பாளரும், இந்த படத்தில் நடித்து வரும் சரத்குமார் ஏற்கனவே சொல்லிவிட்டனர்.
இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டமிட்டமாக சொல்லி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சினிமா கேரியரில் முதல் 50 கோடியைத் தொட்ட திரைப்படம் எது என்பது குறித்து தகவல்களை உள்ளது.
அதன்படி பார்க்கையில் இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம் கில்லி இந்த படம் தான் விஜய்க்கு முதல் 50 கோடியை பெற்றுத் தந்த திரைப்படம். இந்த படம் விஜய்க்கும் சரி த்ரிஷாவுக்கும் ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு விஜய் நடித்த ஒவ்வொரு படமே வெற்றி படம்தான்.