தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தளபதி விஜய். தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் என்ற மாசான செம தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும். அதோடு முக்கியமாக விஜய் ஆண்டனி ஒவ்வொரு திரைக்கதையையும் மிகவும் வித்தியாசமானதாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் ஆனால் இதுவரையிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்தை தருவதாக அமைந்துள்ளது.
அந்தவகையில் இவர் நடிக்கும் திரைப்படங்களிலும் இவரின் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்துவதால் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். விஜய் ஆண்டனி நடிகரையும் தாண்டி இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரும் பல பாடல்களைப் பாடி பிரபலம் அடைந்துள்ளார். அந்த வகையில் முதன் முறையாக எஸ் கே சந்திரசேகர் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அந்த வகையில் சந்திரசேகர் உருவாக்கிய விஜய் திரைப்படமான சுக்கிரவன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகிவுள்ளார் விஜய் ஆண்டனி. அதிலிருந்து விஜய் ஆண்டனிக்கு சந்திரசேகர் இவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருப்பதாக விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.