தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் டாக்டர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக உள்ளதால் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு தற்போது மலை போல குவிந்து வருகின்றனர்.
திரைப்படம் முதல் மூன்று நாட்களிலேயே நல்ல வசூல் வேட்டை நடத்தி சுமார் 15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மேலும் நல்ல வசூலை திரைப்படம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிபிசக்கரவர்த்தி உடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் சிலர் ரீமேக் படங்கள் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறியது முதலில் பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக் முதலில் சிவகார்த்திகேயனுக்கு தான் வந்ததாகவும் ஆனால் அவரோ இந்த படத்தின் கதை வேண்டாம் என தவிர்த்து விட்டாராம்.
அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் ஹிட்டடித்த அல்லு அர்ஜுனின் அள வைகுண்டபுரம்லு படத்தின் ரீமேக்கை தமிழில் இவருக்கு நடிக்க வந்ததாகவும் ஆனால் அந்தப் படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் தவிர்த்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை நடித்து வந்தாலும் ஒரு சில படங்களை நழுவ விட்டு அதில் இருந்து சரியாக எஸ்கேப் ஆகி உள்ளார் அதில் நடித்திருந்தார் இவரது மார்க்கெட் குறைந்திருந்தாலும் குறைந்து இருக்கலாம் அதனால் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்துகொண்டு காயை நகர்த்தி வெற்றி கண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.