தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருவர் சூர்யா. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் சூர்யா கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் ஜெய் பீம் போன்ற படங்கள் சமூக அக்கறை கலந்த படமாக இருந்தது வெளிவந்து மிகப்பெரிய வெற்றி..
பெற்ற நிலையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார் இந்த படம் சங்க காலத்து படமாக உருவாகி வருகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது வெகு விரைவிலேயே இந்த படம் ரிலீஸாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவின் புதிய மற்றும் பழைய செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருவது வழக்கம் அதன்படி ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா தனது திரை பயணத்தில் எத்தனைையோ ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் ஆனால் அவருடைய நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களையும் தாண்டி மக்கள் அதிகம் அளவில் பார்த்துள்ளனர் அந்த வகையில் சூர்யா நடித்த படங்களில் மக்கள் அதிகம் பார்த்த படம் எது என்பது குறித்து நாம் பார்க்க இருக்கிறோம்..
அதிக பேர் பார்த்த படங்களில் முதலில் இருப்பது சூர்யாவின் ஏழாம் அறிவு தான் இந்த படத்தை ஒரு கோடிக்கும் மேலானவர்கள் கண்டு ரசித்துள்ளனர் அதனை தொடர்ந்து சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களை ஒரு கோடிக்கு மேலானவர்கள் பார்த்துள்ளனர். சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் சுமார் 10 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் பார்த்து ரசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.