நடிகர் கமலஹாசன் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்றவர் பின்பு ஒரு கட்டத்தில் ஹீரோவாக மட்டுமே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் உலகநாயகன் கமலஹாசன் என்றும் அழைக்கப்பட்டார். இவரது நடிப்பைப் பார்த்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மிரண்டு போயுள்ளனர்.
அந்த அளவிற்கு தத்ரூபமாக தன்னை அந்த கதாபாத்திரத்தில் இறக்கி நடிப்பவர் ஆவார். ஆனால் சில ஆண்டுகளாக இவர் படங்களில் அதிகம் கமிட் ஆகாமல் அரசியல், தொழில் நிறுவனம், சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி போன்ற பலவற்றிலும் கவனம் செலுத்துவதால் படங்களில் அதிகம் நடிக்க முடியாமல் போனது. நான்கு வருடங்கள் கழித்து தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
சொன்ன கதை அவருக்கு பிடித்துப் போகவே விக்ரம் திரைப்படம் உருவாக்கியது. பான் இந்திய அளவில் உருவான விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றன மேலும் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து முக்கிய நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றவர்களும் நடித்துள்ளதால் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கமலஹாசன் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கடந்த பிக்பாஸ் 5 யில் வெற்றி பெற்ற ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.
ராஜு கமலஹாசனிடம் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து கேட்டுள்ளார் முதலில் கமல் சொல்ல மறுத்துள்ளார் பின்பு பிரியங்கா வற்புறுத்தியதால் கமல் தனது அடுத்த படத்தை பற்றி கூறியுள்ளார். பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் அடுத்து நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது ஒரு பக்கம் நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் படம் வெளியானதால் கமலஹாசன் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ள நிலையில் மறுபக்கம் அடுத்த படம் குறித்தும் அப்டேட்டை கமல் கூறியுள்ளதால் கமல்ஹாசனின் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர்.