இந்த வாரம் முக்கிய போட்டியாளரை வெளியேற்றி தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜய் டிவி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

bigg-boss-6
bigg-boss-6

வெள்ளி திரையில் எப்படி போட்டி பொறாமைகள் இருக்கிறதோ அதேபோல சின்னத்திரையிலும் உண்டு. சின்னத்திரை தொலைக்காட்சிகள் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கத்தான் போட்டி போடுகின்றனர். இதற்காக பல சேனல்கள் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர தொடர்ந்து சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதில் ஒன்றாக

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல் நிகழ்ச்சிகள் ஓடினாலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்தது என்றால் அது பிக் பாஸ் தான் இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 6 -வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டது. இதுவரை 70 நாட்களுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் ஆறில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜிபி முத்து மட்டும் சொந்த காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மற்றவர்கள் அனைவரும் வார வாரம் நடக்கும் எலிமினேஷன் ரவுண்டில் நாமினேஷன் ஆகி ஒவ்வொருவராக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுதும் தொடர்ந்து வார வாரமாக எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேற உள்ளார் அந்த போட்டியாளர் யார் என்பது கூட தற்போது கணிக்கப்பட்டுள்ளது ஆம் அவர் வேறு யாரும் அல்ல பிக் பாஸ் சீசன் 6 ஆக்சன், பேச்சுத் திறமை என எல்லாவற்றிலும் சற்று தூக்கலாக இருந்த தனலட்சுமி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக கூறப்படுகிறது

இதை அறிந்த ரசிகர்கள் அவர் இல்லன்னா பிக் பாஸ் வீடு அமைதியாகிடும் மேலும் கன்டென்ட்  கிடைக்காது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த செய்தி தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை என்ன வேண்டுமானாலும் நடக்கும்..