சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகி வரும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை TRP புள்ளிகளின் அடிப்படையில் தான் பிரித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் BARC நிறுவனம் வாரம் வாரம் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் எந்த திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்களின் தினசரி வேலையை கூட பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு உதவும் வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் அதேபோல் கடந்த வருடம் ஆரம்பித்த இந்த பிரச்சனை தற்போது வரை மக்களை படாதபாடு படுத்தி வருகிறது படப்பிடிப்புக்கு கூட சமீபத்தில் ரத்து செய்யப்பட்டு சமீபத்தில் தான் தொடர்ந்தது என தகவல் கிடைத்தது.
மேலும் கடந்த வாரத்தில் எந்த திரைப்படங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை BARC நிறுவனம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
அதில் சன் டிவியில் ஒளிபரப்பான பிகில் படம் முதலிடத்தில் உள்ளது அதே போல் 2,3 இடங்களில் சன் டிவியின் ரோஜா மற்றும் வானத்தைப்போல தொடர்கள் இருந்தன மேலும் 4 மற்றும் 5வது இடத்தில் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்துள்ளது.
#Bigil 4th time telecast in @SunTV attained 1,20,26,000 BARC impressions 👍 #Master @actorvijay pic.twitter.com/iByp8T6457
— Vijay Team Online (@VijayTeamOnline) May 20, 2021
இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இன்னும் வாரம் வாரம் இதே போல தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியானால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறி வருவது மட்டுமல்லாமல் சன் டிவி நிகழ்ச்சி மட்டும் எப்படி TRPயில் அதிக புள்ளிகளைப் பெற்று வருகிறது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.