சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகர் என்று கேட்டால் அது சிவகார்த்திகேயன் தான் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக களம் இறங்கி நிறைய திரைப்படங்களில் காமெடியனாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் ஆனால் இவருக்கு ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது அவ்வாறு பார்த்தால் இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இவர் தற்போது கதாநாயகனாகவே பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அதனை தொடர்ந்து அயலான் மற்றும் டான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இவர் மிகவும் அற்புதமாக நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.
ஆம் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
சூரி பைக் ஓட்டுவது போலவும் சிவகார்த்திகேயன் பின்னாடி அமர்ந்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் கழுத்தில் ஒரு கேமரா உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் ஒரு போட்டோகிராபர் அல்லது பத்திரிகையாளராக நடித்து இருக்கலாம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.