தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். இதனை தொடர்ந்து ரஜினி சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார்.
இதுவரை ரஜினி 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார் அந்த வகையில் நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ரஜினி நடித்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர் இந்த படம் ரஜினிக்கு 169 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினிகாந்த்துக்கு பிடித்த மூன்று திரைப்படம் என்ன என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.
ரஜினிக்கு பிடித்த இயக்குனர் எதார்த்தமான கதைகளும் இயற்கையான காட்சி எடுப்பதற்கு பெயர் போனவர் தான் இயக்குனர் மகேந்திரன். முதன் முதலில் ரஜினியை வைத்து தான் படம் இயக்கினார் ரஜினிகாந்தை வைத்து மகேந்திரன் இயக்கிய படங்கள் முள்ளும் மலரும், ஜானி, கைகொடுக்கும் கை ஆகிய மூன்று படங்களுமே ரஜினியின் மனதிற்கு நெருக்கமான படங்கள் என சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக முள்ளும் மலரும் படம் ரஜினியின் நடிப்பு வேற லெவலில் இருக்கும் இந்த படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதில் ரஜினியுடன் கைகோர்த்து சரத் பாபு, சோபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினர் இந்த படம் சிறந்த படத்திற்கான ஃபிலிம் ஃபயர் விருதையும் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.