தனது திரைப்படங்களை ரசிகர்களுக்கு மிகவும் தரமாக கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை நாம் அறிவோம் அதேபோல இவர் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார் அந்த வகையில் பார்த்தால் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார்.
இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் ஒன்று தான் வாலி இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் சிம்ரன்,ஜோதிகா,விவேக் என பலரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது.
குறிப்பாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது பல கோடி வசூல் செய்தது மட்டுமல்லாமல் தற்போதும் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.அஜித் இரட்டை வேடத்தில் நடித்தாலும் சிம்ரனின் நடிப்பு மக்களை கவர்ந்து விட்டது இந்த திரைப்படத்தின் மூலம் சிம்ரன் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வந்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்ரன் நடித்த பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது.இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரபல நடிகை ஒருவர் தான் நடிக்க வேண்டுமாம் ஆம் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை கீர்த்தி ரெட்டி தான் நடிக்க வேண்டுமாம்.
ஆனால் அவர் அப்போது பிசியாக இருந்ததால் ஒரு சில காரணங்கள் குறித்து அவர் நடிக்காமல் போய் விட்டது அதனால் தான் சிம்ரன் இந்த திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார் என இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.