சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் தற்போது எந்த நடிகை நடிக்க போகிறார் தெரியுமா.? இவர் நடித்தாலே படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விடுமே.

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா,குஷ்பூ,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் மிக ஆவலாக இருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யார் எந்த இயக்குனருடன் தனது அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை அறிவிப்பார் என்பது தெரியவில்லை.மேலும் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்த திரைப்படம் தான் சந்திரமுகி.

இந்த திரைப்படத்தில் ஜோதிகா,பிரபு,நாசர்,வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  எப்பொழுது உருவாகும் என ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் கடந்த வருடம் ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியானது மேலும் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிக்க போகிறார் என பல ரசிகர்களும் கேட்டு வந்த நிலையில் தற்போது இது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் ஜோதிகா வேடத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்து விட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் எனவும் இந்த திரைப்படம் எப்பொழுது உருவாகும் எனவும் பலவிதமான கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.