எதற்கும் துணிந்தவன் படக்குழு அடுத்த கட்ட ஷூட்டிங்கு எங்க போக போறாங்க தெரியுமா.? தெரிஞ்ச நீங்களும் போவிங்க..

surya
surya

சினிமா உலகில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து பாண்டிராஜ் தற்போது சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய படமாக உருவாக வர சூர்யா நடித்து வருகிறார் தமிழ் நாட்டை சுற்றி உள்ள காரைக்குடி, சென்னை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு வேகமாக நடத்தப்பட்டு வந்தது.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தாண்டி வேறு ஒரு இடத்திற்கு நகர்கிறது படக்குழு அதாவது எதற்கும் துணிந்தவன் படக்குழு தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங்காக கோவா செல்ல இருக்கிறது. திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப உறவுகள் கொண்டாடும் திரைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பாண்டிராஜ் இயக்கும் பெரும்பாலான படங்கள் அப்படித்தான் இருந்து வந்துள்ளன.

அதே போல் தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை இளவரசு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

டி இமான் சூர்யாவுக்கு முதல் முறையாக இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்க அடுத்தகட்ட கோவா செல்ல இருக்கிறது. எதற்கும் துணிந்தவன் படம் பண்டிகை நாளை குறிவைத்து தயாராகி வருகிறது. படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு.