இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒவ்வொரு திரைப்படத்தையும் எச்டி தரத்திலும் மிகப்பெரிய பொருட் செலவிலும் எடுப்பதால் அந்த படத்திற்காக ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும் தற்போது விஜய்யுடன் இணைந்து உள்ளதால் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
பீஸ்ட் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சார்ஜாவில் வெற்றிகரமாக நடந்த இதையடுத்து இரண்டாம்கட்ட ஷூட்டிங் சென்னையில் சிறப்பாக சமீபத்தில் அரங்கேறியது அங்கு பாடல்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட ஷூட்டிங் வருகின்ற திங்கட்கிழமை நடத்தப்பட உள்ளது.
இதற்காக பட குழு தீவிரமாக இறங்கி உள்ளது. சூட்டிங் தற்பொழுது ரஷ்ய நாட்டில் எடுக்கப்பட உள்ளதால் படக்குழு அங்கு செல்ல இருக்கிறது மேலும் அங்கு பல முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
பல தடைகளைத் தாண்டி தற்போது பீஸ்ட் திரைபடத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது வெகுவிரைவிலேயே இந்த திரைப்படத்தை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க படக்குழு தீயாய் வேலை செய்கிறது.