தளபதி 67 படத்தின் சூட்டிங் எங்கு நடக்கிறது தெரியுமா.? வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்…

thalapathy-67
thalapathy-67

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரையறுப்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று வாரிசு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே லோகேஷ் கூறியிருந்தார். அதன் பிறகு வாரிசு படம் ரிலீஸ் ஆன பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று கூறியிருந்தார் இதனால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவபோது தளபதி 67 திரைப்படத்திலிருந்து புது புது தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் 50 வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் இந்த தம்பதியினருக்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து மேலும் சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடைபெற்று வருகிறது என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது தளபதி 67 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் நடிக்கிறார் என்று அவரே சமீப காலங்களாக கூறி வருகிறார் அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் உடன் கடுமையான சண்டை போட்டுக் கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ள தகவல் வெளியாகிய உடனே ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் மேலும் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று மிக தீவிரமாக காத்திருக்கிறார்கள்.