தமிழ் சினிமா உலகில் தல அஜித்தின் திரைப்படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது தெரிந்ததுதான்.அந்த வகையில் தல அஜித் சென்றவருடம் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானபோது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
மேலும் தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்து இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஹைதராபாத்தில் வலிமை படப்பிடிப்பு நடந்து வந்தபோது தல அஜித் அங்கு பைக்கில் ஸ்டண்ட் செய்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் மாற்றலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தார்கள் ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிலேயே படமெடுக்க ஆரம்பிக்க இருக்கிறார்கள்.
இதைதொடர்ந்து வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கப்போகிறது என தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த அஜித்தின் ரசிகர்கள் டெல்லியில் மிக வேகமாக படப்பிடிப்பு நடந்தால் சூப்பராக இருக்கும் என கூறி வருகிறார்கள்.