தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் சாதனை செய்துவிட்டது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்களை எடுத்து உள்ளார் இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கை கோர்த்து இந்த திரைப்படத்தை மிகவும் அருமையாக நெல்சன் எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விட்டது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் இரண்டு பாடல்களின் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு தற்பொழுது நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அடுத்த கட்ட படபிடிப்பு எங்கு எந்தமாதிரி காட்சி எடுக்கப்படும் என்பது பற்றி ஒரு புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதில் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாகவும் அங்கு பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருடன் கைகோர்க்கிறார் என்பது தெரியவில்லை இதனைப் பற்றியும் இவரது ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில் பலரும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என கூறிவருகிறார்கள்.