“வெந்து தணிந்தது காடு” படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் எங்க தெரியுமா.? சிம்பு இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.

simbu
simbu

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான காதல் மற்றும் ஆக்சன் படங்களை கொடுத்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன். சமீபகாலமாக இவர் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி நடிக்கவும் தொடங்கியுள்ளார்.

பல படங்களில் ஆக்ஷன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அந்த படத்திற்கு உயிர் ஊட்டி வருகிறார். இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் அவ்வபோது படங்களை இயக்கியும் வருகிறார் அந்த வகையில் மீண்டும் கௌதம் மேனன் சிம்புவுடன் கைகோர்த்து “வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

திரைப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறித்து சின்ன பையனாக நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படம் மற்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

வெந்து தணிந்தது காடு இப்படத்தின் இரண்டு கட்ட சூட்டிங்கில் தீவிரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்காக மும்பை செல்ல தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஆக்ஷன் காட்சிகளில் பரிதாபமாக நடித்துள்ளதாகவும் படம் நிச்சயம் சிம்புவுக்கு மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைப்பதில் எந்த ஒரு தடங்கலும் இருக்காது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு எப்படி இருக்கிறார் பாருங்கள்.