குஷ்புவை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள் எந்த இடத்தில் தெரியுமா.?

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை தனது திறமை மற்றும் விடா முயற்சியை வெளிப்படுத்தி சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் கமலஹாசனுக்கு பிறகு பல டாப் நடிகர்கள் சிறப்பான படங்களை கொடுத்து..

பல ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற நிலையிலும் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை பார்த்து தமிழ் திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது. அந்த அளவிற்கு கமலகாசன் வயது ஆனாலும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து உள்ளார் இதனை சினிமா வட்டாரங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடைசியாக வெளிவந்த விஜயின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ரஜினியின் அண்ணாத்த போன்ற அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து வெற்றி நடை கண்டு வருகிறது விக்ரம் திரைப்படம். படம் தமிழை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதுவரை விக்ரம் திரைப்படம் உலக அளவில் 320 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இன்றும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கமல்ஹாசன் ரசிகர்கள் கமலுக்கு கோவில் கட்டுவதாக கூறி வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியால் அங்கு கமலுக்கு கோவில் கட்ட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த கோவிலை திறக்க கமலஹாசனுக்கே அழைப்பு விடுத்துள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. நடிகர் கமலஹாசன் அந்த கோவிலை திறந்து வைக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கொல்கத்தாவில் ஏற்கனவே அமிதாப்பச்சனுக்கு கோவில் கட்டி வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.