தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் தில்ராஜு மிகப் பிரம்மாண்ட பொருள் அளவில் படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதி கட்டப் படப்புடிப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அண்மையில் கூட படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சிய புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகியது.
படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க மறுபக்கம் இந்த படத்தின் வியாபாரமும் ஜோராக நடைபெற்று வருகிறது வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
அதற்கு ஏற்றார் போல லோகேஷ் எல்லாவற்றையும் ரெடியாக வைத்திருக்கிறாராம் விஜய் வந்த உடனேயே ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகர் விஜய் இத்தனை நாட்களாக தனது அலுவலகத்தை பெசன்ட் நகரில் தான் வைத்து வந்தார்.
தற்பொழுது பட்டினபாக்கத்தில் ஒரு பெரிய பிளான்ட் வாங்கி தனது அலுவலகத்தை மாற்றி இருக்கிறார் அந்த பிளாட்டின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது விஜயின் புதிய அலுவலகம் பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு பிளாட்டில் 15 வது மாடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு பெரிய அளவில் வைரலாகி வருகிறது.