KGF 2 படத்தின் வசூல் சாதனையை முறையடித்த பொன்னியின் செல்வன் – ஏங்கு தெரியுமா.?

ponniyin-selvan-
ponniyin-selvan-

இந்த ஆண்டு வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் பிரம்மாண்டமான வசூல் சாதனை படைத்திருக்கின்றன அந்த வகையில் RRR, கே ஜி எஃப் 2, விக்ரம் என சொல்லிக் கொண்டே போகலாம் இந்த லிஸ்டில் தற்பொழுது பொன்னியின் செல்வமும் இணைந்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படமாக மணிரத்தினம் எடுத்துள்ளார்.

படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தால் அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகியது மக்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.

மேலும் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருவதால் இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் குறிப்பாக சினிமா பிரபலங்கள் இந்த படத்தை பார்க்க வந்த வண்ணமே இருக்கின்றனர். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

முதல் நாளில் 80 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய பொன்னியின் செல்வன் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 கோடி வசூல் எட்டிவிட்டதாக கூறுகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில்   பிரசாந்தி நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் 2 மிகப்பெரிய வசூலை அள்ளி சாதனை படைத்தது.

இந்த படம் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பராக ஓடியது. தற்பொழுது இந்த படத்தின் சாதனைய  முறையடித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 120 கோடி அள்ளி கேஜிஎப் 2 படத்தின் சாதனையை  ஓவர் டேக் செய்து உள்ளது. இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.