வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸை முறியடித்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்.! எங்கு தெரியுமா.?

ajith - dhanush
ajith - dhanush

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருந்த திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியது. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் உருவான படங்கள் அனைத்தும் தனுஷ் கேரியரில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து திருச்சிற்றம்பலம் எனும் படத்தை எடுத்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் திரையரங்கிற்கு செல்லாமல் நேரடியாக ஓடிடி தளத்திற்கு சென்றது. அதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷின் இந்த படம் திரையரங்கில் வெளியாகி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

படமும் செண்டிமெண்ட், காதல், ஃப்ரெண்ட்ஷிப் போன்ற அனைத்தும் கலந்துள்ளதால் இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் திரையரங்கை நாடி என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர். படம் ஒவ்வொரு நாளும் அதிகளவு வசூல் வேட்டை நடத்தி வருகின்றன  இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் அண்மையில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கூட கொண்டாடினர்.

மேலும் தமிழில் இதுவரை வெளிவந்த பல திரைப்படங்களின் வசூலை முறியடித்து திருச்சிற்றம்பலம் படம் ஓடி வருகிறது. அதன்படி தற்போது வந்த தகவலில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் அஜித்தின் வலிமை படத்தின் வசூல் சாதனையை முந்தியுள்ளது.

ஆம் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி 10 நாட்களில் ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் $ 210, 333 வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் வலிமை படத்தின் வசூலை முந்தி உள்ளது. மேலும் வலிமை படத்தின் ரெக்கார்டை ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் முந்தி உள்ள தமிழ் திரைப்படங்களில் திருச்சிற்றம்பலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.