“பீஸ்ட்” படத்திற்காக தளபதி விஜய் இப்போ எங்க போகிறார் தெரியுமா.? விமான நிலையத்தில் இருந்து வெளியான தளபதி புகைப்படம்.

vijay
vijay

உலகில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அவர்களை மட்டுமே சினிமாவுலகம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பைக் கொடுத்து அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி கமலை தொடர்ந்து அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள அவர்தான் விஜய்.

தொடர்ந்து சூப்பரான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வசூலை குவிக்கின்றன. தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் நெல்சன் திலீப் குமார் எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடு மற்றும் இந்தியாவில் சில முக்கியமான இடங்களில் சூட்டிங் நடந்து வந்தது கடைசியாக ரஷ்யாவில் ஷூட்டிங் முடிந்த கையோடு வந்த படக்குழு மீண்டும் தற்போது இந்தியாவிலுள்ள டில்லியில் படத்தின் ஷூட்டிங் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சமீபகாலமாக தனது அப்பாவுடன் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். திடீரென நடிகர் விஜய் நேற்று தனது பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக தனது அம்மா மற்றும் அப்பா மற்றும் பல பேர் மீது வழக்கு பதிவு போட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் மிகப்பெரிய ஷாக் ஆகிய நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டு வர குஷிப்படுத்த தற்போது விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது விஜய் பீஸ்ட் படத்துக்காக தற்போது டெல்லி கிளம்பியுள்ளார் அப்போது விமான நிலையத்தில் அவர் ஏறி உட்காரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் ரசிகர்கள் பழசை மறந்து விட்டு இந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் உற்சாகத்தில் இருக்கின்றனர்.