வாத்தி படத்தின் ஆடியோ லான்ச் எங்கு எப்போது நடக்கிறது தெரியுமா.? வெளியான தகவலால் உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

vaathi
vaathi

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் வாத்தி திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இந்த நிலையில் வாத்தி படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடக்க இருக்கிறது என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுசு இவர் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்திருந்தார் அதில் மூன்று திரைப்படம் மட்டும் தான் வெளியானது. ஆனால் ஒரு திரைப்படம் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது ஆனால் நானே வருவேன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

நானே வருவேன் திரைப்படத்தால் ஏற்பட்ட களங்கத்தை எப்படியாவது வாத்தி திரைப்படத்தின் மூலம் தனுஷ் அவர்கள் சரி செய்து விடுவார் என்று எண்ணியிருந்தனர் ஆனால் அந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த வாத்தி திரைப்படம் தற்போது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் வாத்தி படத்தின் ஆடியோ லான்ச் தற்போது மிக பிரம்மாண்டமான ஒரு இடத்தில் கொண்டாடப்பட்ட இருக்கிறது என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது வாத்தி திரைப்படத்தின் ஆடியோ லான்ச் தாய்லாந்தில் உள்ள கல்லூரியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் பெரிய நடிகர்கள் படங்கள் ஒரு சில படங்களின் ஆடியோ லான்ச் தான் அந்த கல்லூரியில் நடந்திருக்கிறது அந்த வகையில் தற்போது தனுஷின் வாத்தி படத்தின் ஆடியோ லான்ச் அந்த கல்லூரியில் நடக்க இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் D ரசிகர்கள்..