“பொன்னியின் செல்வன்” படத்தில் இடம்பெற்றுள்ள இலங்கை காட்சிகள் அனைத்தும் எங்கு உருவாகப்பட்டது தெரியுமா.? வெளிவரும் உண்மை தகவல்..

ponniyin selvan
ponniyin selvan

2022 ஆம் ஆண்டு தமிழ் டாப் நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் அவர்கள் படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இந்த லிஸ்டில் பொன்னியின் செல்வன் படம்  இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அது தற்பொழுது நடந்து வருகிறது இயக்குனர் மணிரத்தினம்   கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி  படத்தை எடுத்தார். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மக்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதன் விளைவாக வசூலிலும் பட்டையை கிளப்புகிறது தமிழை தாண்டி பிற மொழிகளிலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தி உள்ளது. இதுவரை மூன்று நாள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 230 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்கள் தமிழ்நாட்டில் விடுமுறை என்பதால் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படம் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது இந்த படத்தில் மிகப்பெரிய பிளஸ்ஸாக இருப்பது.  படத்தின் காட்சிகள் என கூறப்படுகிறது பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள  இலங்கை  காட்சிகள் அனைத்தும் சூப்பராக இருக்கும் ஆனால் இந்த படத்தின் காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது

படத்தில் வரும் இலங்கை காட்சிகள்  அனைத்தும் தாய்லாந்தில் தான் படமாக்கப்பட்டதாம் யானை மீது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி சவாரி செய்யும் காட்சி ஐஸ்வர்யா ராய் யானையில் வந்து பொன்னியின் செல்வனை காப்பாற்றும் காட்சி உள்ளிடவை தாய்லாந்தில் தான் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.