புத்தாண்டை கொண்டாட நடிகை சமந்தா சென்ற இடம் எங்கு தெரியுமா.? கூட யார் யார் போயிருந்தாங்க.. தெரியுமா.? ஒருவழியாக வெளிவந்த தகவல்.

samanatha-
samanatha-

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது அங்கேயும் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

இதனால் அவர் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக பெயரை பெற்றார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சமந்தா தொடர்ந்து பட வாய்ப்புகளையும் கைப்பற்றி வருகிறார் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். சினிமா உலகில் வெற்றியை ருசித்து வரும் சமந்தாவை தற்போது கேட்க யாருமில்லை என்பதால் தனக்கு எந்த கதாபாத்திரம் பிடிக்கிறதோ அதை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் கிளாமராகவும் புகைப்படங்களை அள்ளி வீசி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறார் அண்மையில் கூட இவர் கோவாவில் தனது தோழிகளுடன் அருவியில் கும்மாளம் அடித்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலானது அதனை தொடர்ந்து இப்பொழுது நடிகை சமந்தா 2022 வருடம் தொடங்கியிருக்கிறது.

அதற்காகத்தான் அவர் கோவாவை சென்றுள்ளதாக கூறப்படுகிறது நடிகை சமந்தா தோழிகள் மற்றும் அவர் உயிருக்கு உயிராக வளர்ந்து வரும் அந்த நாயையும் அழைத்துக்கொண்டு கோவாவில் தங்கி இந்த புத்தாண்டை வேற லெவல் வேற லெவலில் கொண்டாடியுள்ளார்.