பெரிய எதிர்பார்ப்புகளிடையே வெளிவந்த வாரிசு திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வெற்றி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்துள்ளது அதனால் விஜய் ரசிகர்கள் முதற்கொண்டு மக்கள் என பலரும் இந்த படத்தை திரையரங்கில் கண்டு களித்துள்ளனர்.
மேலும் விஜய்க்கு நிகரான மற்றொரு டாப் நடிகரான அஜித்தின் துணிவு படமும் ஒரே சமயத்தில் வெளியாகியது இருந்தாலும் இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று சம அளவு வசூலை அள்ளியுள்ளது. வாரிசு படத்தின் வெற்றியை தளபதி விஜய் பட குழு உடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். அந்த மகிழ்ச்சியில் அடுத்த பட வேலையையும் ஆரம்பித்துள்ளார்.
அதன்படி விஜயின் அடுத்த 67ஆவது படத்தில் லோகேஷ் உடன் இணைந்துள்ளார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது முதற்கட்ட பட பிடிப்பு தற்போது காஷ்மீரில் துவங்கப்பட உள்ளதால் தனி விமானம் ஒன்றை எடுத்துக் கொண்டு பட குழுவிலுள்ள பலரும் காஷ்மீர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாகி 20 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றி நடை கண்டு வருகிறது. இருந்தாலும் இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்தனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வாரிசு திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாரிசு படம் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை…