தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஏ கே 62 திரைப்படத்தில் நடிகை இருக்கிறார் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்க ரெடியாக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள துணிவு திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாவதால் திரைத்துறையினர் பதட்டத்தில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் துணிவு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த முதல் பாடல் ரசிகர்களை மேடையில் ஆட வைக்கும் பாடலாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் ஊடகங்களில் பேட்டியளித்து வருகிறார் அந்த வகையில் அவர் கூறியிருந்தது என்னவென்றால் துணிவு திரைப்படம் பேங்க்ராபரியை வைத்து எடுக்கப்பட்டது அல்ல அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்பட காட்சிகளை மங்காத்தா காட்சிகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க எனக்குப் பிடித்த மாதிரி எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியானால்தான் இந்த படத்தின் கதை என்னவென்று உங்களுக்கு புரியும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் துணிவு படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த அறிவிப்பை போஸ்டருடன் அடுத்த வாரம் படகுழு வெளியிடும் என கூறப்படுகிறது.