தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்களில் நடிகர் விஜய் சேதுபதி ஒருவர் இவர் நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தனது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன், ஆகிய மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரிய கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படமான விடுதலை திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி இது போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
இதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று மைக்கேல் இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சந்தீப் கிஷன், கௌதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் டீசர் குறித்து ஒரு தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஆம் விஜய் சேதுபதி நடித்து வரும் மைக்கேல் திரைப்படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் செய்யக்கூடிய தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டீசரை வெளியிடு உள்ளனர். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
