தல அஜித் பல மாதங்களாக நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மிகவும் இரவு பகலாக நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது தல அஜித்தின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் அவருக்கு மிகவும் முக்கியமான திரைப்படம் ஏனென்றால் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டால்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.தல அஜித்தின் திரைப்பயணத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் ரசிகர்களுக்கு சலிக்காமல் தொடர்ந்து பல திரைப்படங்களை கொடுத்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.
ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது அறிவிப்பார்கள் என்பது தெரியவில்லை பலரும் தல அஜித்தின் வலிமை திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என கூறி வருகிறார்கள் படத்தின் டீசர் கிட்டதட்ட தயாராகி விட்டதாகவும் அதேபோல் மேக்கிங் வீடியோ ஒன்று தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களும் கூடிய சீக்கிரம் வெளியே வரப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Coming soon #Thala தீபாவளி #ValimaiTeaser விரைவில்
🤩🤩🤩#AjithKumar #Valimai #ValimaiUpdate #AjithKumar #ThalaAjith @ThalaFansClub @TLasharan @MASSAJITH @ThalaFansOnline pic.twitter.com/fj55QXS2aU— RK SURESH (@studio9_suresh) September 16, 2021
இந்நிலையில் தல அஜித்தின் தீவிர ரசிகரான தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வருகிறது தல தீபாவளி டீசர் விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இவர் பதிவு செய்தது தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது வார்த்தையை நாங்கள் நம்புகிறோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.