அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. “விடாமுயற்சி” படத்தின் சூட்டிங் எப்போது தெரியுமா.? வெளிவந்த பரபரப்பு செய்தி

ajith
ajith

ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் அஜித். வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான பல சமூக கருத்துக்கள் நிறைந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது.

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. ஒருவழியாக அஜித்தும்,  லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து படம் பண்ண உள்ளதாக தகவல்கள் எல்லாம் வெளியாகின.  திடீரென இயக்குனர் மாற்றப்பட்டார். விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு மகிழ்ந்திருமேனியை இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

இருந்தாலும் விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவே இல்லை இதனால் பலரும் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது என  கிண்டல் பண்ணினர் ஆனால் சினிமாவை நன்கு அறிந்திருந்த பிரபலங்கள் பலரும் அஜித் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

நிச்சயம் விடாமுயற்சி படம் தொடங்கும் என சொன்னார்கள் அதன்படி சிறு இடைவெளிக்கு பிறகு விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது.. விடாமுயற்சி படம் வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது ஆகஸ்ட் மாதம் தொடங்கி வெறும் மூன்றே மாதத்தில் இந்த படத்தை முடிக்க மகிழ்திருமேனி திட்டமிட்டு இருக்கிறார்.

காரணம் அஜித் அடுத்ததாக உலக அளவில் பைக் சுற்றுலா தொடங்க இருப்பதால் படக்குழு இப்படி ஒரு பிளான்  போட்டு இருக்கிறது. படத்தின் சூட்டிங் அனைத்தையும் முடித்து 2024 கோடையில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.