பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தமிழ் சினிமா உலகில் இதுவரை எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் இப்பொழுது கூட இயக்குனர் சங்கர் உலக நாயகன் கமலஹாசன் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறுப்பாக்கம் ராம்சரணை வைத்து தெலுங்கில் RC 15 என்னும் திரைப்படத்தையும் எடுத்து வருகிறார். ஆனால் சங்கர் அதிகமாக இந்தியன் 2 படத்திற்கு தான் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கமலுடன் கைகோர்த்து இந்த திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இயக்குனர் சங்கர் இந்தியன் 2 மற்றும் RC 15 இரண்டு படத்தையும் வெற்றிகரமாக எடுத்து முடித்துவிட்டு..
அடுத்ததாக கா வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற சரித்திர நாவலை தழுவி ஒரு புதிய படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அந்த படத்தை மூன்று பாகங்களாக வெளியிட இருக்கிறாராம் ஷங்கர் இந்த படத்தை ஆயிரம் கோடி பொருட்செளவில் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் கூட பேட்டி ஒன்றில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேல் பாரி படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகளை இயக்குனர் சங்கர் தொடங்க இருப்பதாக தெரிவித்தார் அதோடு மட்டுமல்லாமல் இந்த படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகும் என்றும் இந்த படத்தில் சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார் என்றும் இவருடன் இணைந்து கன்னட நடிகர் யாஷ் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.