அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பார் அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்துவரும் திரைப்படம் துணிவு இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் robery மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது.
இதனால் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் டப்பிங் பணிகளை நோக்கி பட குழு நகர்ந்து இருக்கிறது ஆனால் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. ஆனால் இந்த படம் செம்ம மாஸாக உருவாகியிருக்கிறது ஏனென்றால் அண்மையில் ஹெச் வினோத்..
இந்த படம் நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அருமையாக உருவாகி வருவதாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் பலரும் துணிவு படம் குறித்து ஏதேனும் அப்டேட் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என கருதி உள்ளனர்.
இதுவரை துணிவு திரைப்படத்திலிருந்து இரண்டு மூன்று போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்த நிலையில் படத்தின் மூன்றாவது அப்டேட் இந்த வார இறுதியில் வெளிவரும் என தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் மேலும் இந்த தகவலை இணையதள பக்கத்தில் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.