வலிமை திரைப்படம் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா.? இதோ முக்கிய பிரபலம் போட்ட ட்விட்.!

ajith
ajith

தல அஜித் நடிப்பில் மிக வேகமாக நடந்து வரும் திரைப்படம் என்றால் அது வலிமை திரைப்படம் தான் வலிமை திரைப்படம் கடந்த சில வருடங்களாகவே படப்பிடிப்புகள் நடந்து வருகிறது இந்நிலையில் ரஷ்ய நாட்டில் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக சமீபத்தில் தகவல் சமூக வலைதளங்களில் வெளியானதை நாம் பார்த்திருப்போம் அதேபோல் இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமா குரோஷி நடித்து வருகிறார்.

பொதுவாகவே இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவரது நடிப்பில் இந்த திரைப்படம் முடிந்தவுடன் எப்பொழுது வெளியாகும் என பல ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக கூற வேண்டுமென்றால் நாங்க வேற மாதிரி பாடல் யூடியூபில் பல பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல் இந்தப் பாடலை தான் தமிழ்நாட்டு இளைஞர்கள் போன் ரிங் டோனாக வைத்துள்ளார்கள் என்று கூட கூறலாம்.பலரும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன் கேட்கும் ஒரே கேள்வி என்றால் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும்.

என்பது மட்டும்தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு பிரபலம் ட்விட் போட்டுள்ளார் ஆம் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பிரபல திரையரங்கு உரிமையாளர் நாகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆயுதபூஜை அக்டோபர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானால் நீண்ட நாட்கள் ஓடும்.

அதுமட்டுமல்லாமல் பலரும் விடுமுறை நாட்களில் இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார் இதனை வைத்துப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் சொல்வது போலவே இந்த திரைப்படம் இந்த நாளில் வெளியானால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.