சன்னி லியோன் முதலில் அந்த மாதிரியான படங்களில் நடித்து பின் இவர் சினிமா உலகில் என்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடதக்கது சினிமாவுக்கு வந்ததும் போதும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுத்து அசத்தினார்.
அதுவும் எப்படிப்பட்டது என்றால் பெரிதும் ஐட்டம் பாடலுக்கு மற்றும் கவர்ச்சி சீன் களுக்கு இவரை இழுத்து போட்டனர் இவரும் தைரியமாக நடித்ததால் தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் மேலும் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
தமிழில் வடகறி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து வீரமாதேவி மற்றும் பல படங்களில் இப்போ நடித்து வருகிறார். ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை யுவன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் எடுக்கப்பட்ட இருந்ததால் சன்னி லியோன் அப்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல்கள் ஆகிய அனைத்தும் எடுக்கப்பட்டு ஒரு வழியாக முடிந்து விட்டதாம் சன்னிலியோன் இந்த படத்தில் ராணி கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சன்னி லியோனுடன் கைகோர்த்து தம்பி ராமையா, காமெடி நடிகர் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனராம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலுமாக முடிந்ததையடுத்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.