கன்னட சினிமா உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் கேஜிஎப், கே ஜி எஃப் 2 போன்ற படங்களை தொடர்ந்து காந்தரரா திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள காந்தாரா.. இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அதன் பின்னர் சில வாரங்கள் கழித்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது.
ஹிந்தியில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் தொடர்ந்து சூப்பராக ஓடியதன் காரணமாக பிரமாண்டமான வசூலை அருளியது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒட்டு மொத்தமாக சுமார் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎப் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படமாக காந்தாரா படம் பார்க்கப்படுகிறது இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் காந்தாரா திரைப்படம் வெகு விரைவிலேயே OTT தளம் பக்கம் திசை திரும்பவுள்ளது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் ஆம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் OTT தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. திரையரங்கில் வெற்றி பெற்றது போலவே காந்தாரா OTT தளத்திலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.