சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படம் எப்போது வெளியாகும் தெரியுமா இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

santhanam

தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து பின்பு முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் தான் சந்தானம் இவருக்கு ஒருகட்டத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவ்வாறு இவர் கதாநாயகனாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து கதாநாயகனாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான A1, பிஸ்கோத்,பாரிஸ் ஜெயராஜ்,டகால்டி போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் தான் டிக்கிலோனா.

இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர்,பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் இந்த திரைப்படம் நேரடியாகZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறதாம் இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் திரையரங்குகளில் இவரது திரைப்படங்கள் வெளியானால் நன்றாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து விடும் என கூறி வந்தார்கள்.ஆனால் அவர்களுக்கு எதிராக இப்படி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பலரும் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள்.